Global Football (Soccer) Event·2 / 15

On the field, there is nothing more important than the ball. The players will do everything to protect it and get the ball where it belongs. In the Game of Life, where do you belong?

உங்களுடையதை கேளுங்கள்

வேதாகம மேற்கோள்கள்

பகிரவும்
Psalm 86:15

But You, O Lord, are a compassionate and gracious God, slow to anger, abounding in loving devotion and faithfulness.

Berean Standard Bible

Public Domain

மேலும் படிக்க…
இலவச வளங்கள்

வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்

உரைநகல்

Tamil (தமிழ்)
கால்பந்து என்பது தோலும், ரப்பரும் கொண்டு தைக்கப்பட்ட ஒரு பொருள் மட்டுமே. அதில் விசேஷம் ஒன்றுமில்லை. உலகத்திலுள்ள நாடுகளில் இலட்சக்கணக்கில் கால்பந்துகள் உண்டு. ஆனால் அதே கால்பந்து விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது ... அதைவிட முக்கியமானது வேறொன்றும் இருக்காது. மைதானத்தில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரரும் பந்து சரியாக எங்கு இருக்கிறது என்று தான் பார்க்கத் துடிப்பார்கள். பார்வையாளர்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த ஒரு பந்தினால் அவர்கள் தங்கள் வாழ்க்கையையே மறந்துவிடுவார்கள். பந்து ஒரு குறிப்பிட்ட வீரரின் கையில் கிடைக்கும்போது, அவர்களுடைய கவனம் எல்லாம் அதன் மீதே இருக்கும். அந்தத் தருணத்தில், அவர்களைப் பொறுத்தவரை, வேறு எதுவும், வேறு யாரும் முக்கியமல்ல. அதற்கு எவ்வளவு ஆற்றல் தேவைப்படும் அல்லது பின்னர் தங்கள் உடல் எவ்வளவு வலிக்கும் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தங்கள் சொந்த உடலைக் கொண்டு அந்தப் பந்தை மறைத்துப் பாதுகாக்கக் கூடச் செய்வார்கள். செய்யத் தகுதியானது ஒன்றே ஒன்றுதான்... ... பந்து இருக்க வேண்டிய இடத்திற்கு அதைக் கொண்டு செல்வதுதான். இதைவிட உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால் … அப்படித்தான் இயேசுவும் உங்களைப் பார்க்கிறார் என்பதுதான். இயேசுவுக்கு உங்களைப் பற்றிய எல்லாம் தெரியும். நீங்கள் எப்படி இருந்தாலும் அவர் உங்களை ஏற்றுக்கொள்கிறார், அதோடு உங்களைப் பாதுகாத்து, பராமரிக்கவும் விரும்புகிறார். எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரே நோக்கத்திற்காக இயேசு தம் ஜீவனையும் கொடுத்தார்... அதனால் நீங்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்க முடியும் ... அதுதான் உங்கள் வீடு. அங்கு அவருடன் இருப்பீர்கள். அதுதான் நீங்கள் இருக்க வேண்டிய இடம். ஒரு விளையாட்டுப் போட்டி முடிந்ததும், எல்லோரும் அரங்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். ஆனால், இயேசுவோ இன்னும் அங்கேயே காத்திருப்பார். உங்களுக்காகக் காத்திருப்பார். இயேசு உங்களை நேசிக்கிறார். இனி தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தான். உங்களுடைய வீட்டிற்கு உங்களை அழைத்துச் செல்ல அவரை அனுமதியுங்கள்.
JesusFilm