பகுதி
Birth of Jesus
4 நிமி.FHD
Women's Resources·10 / 72கிளிப் 10 / 72
Birth of Jesus
Luke makes his introduction as the careful author of this Gospel. The angel Gabriel appears to Mary, a virgin in Nazareth. He announces to her that she has found favor with God and will give birth to Jesus, the Son of God. Through Jesus' birth, prophecies are fulfilled by the arrangement of events. God leaves no detail unnoticed. The same can be said of our own lives.
கேள்விகள்தொடர்புடைய கேள்விகள்
உங்களுடையதை கேளுங்கள்வேதாகம மேற்கோள்கள்
பகிரவும்Luke 1:1
Many have undertaken to compose an account of the things that have been fulfilled among us,
Berean Standard Bible
Public Domain
மேலும் படிக்க…இலவச வளங்கள்
வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்உரைநகல்
Tamil (தமிழ்)
அன்புள்ள தியோப்பிலுவே, எங்களுக்குள் நடந்த அநேக உண்மையான சம்பவங்களை
நீர் அறிந்து கொள்ள வேண்டுமென்று இதை எழுதுகிறேன்.
அகஸ்துராயன் ரோமாபுரியில் அதிபதியாகவும்,
ஏரோது யூதேயா தேசத்தின் ராஜாவாகவும் அரசாளும் நாட்களில்,
தேவன் தமது தூதனாகிய காபிரியேலை நாசரேத்தூரில் வசித்த கன்னியிடம் அனுப்பினார்,
அந்த கன்னிகையின் பெயர் மரியாள்.
மரியாளே; பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்,
நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
இது எப்படியாகும்?
நான் ஒரு கன்னிகை.
பரிசுத்த ஆவி உன்மேல் வரும்,
ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ள பிள்ளை உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்,
அவருடைய ஆட்சிக்கு முடிவிராது.
மரியாள், தன் சொந்தக்காரியான எலிசபெத்தை சந்திக்க சென்றாள்,
அவளும் அற்புதமாக கர்ப்பவதியாகியிருந்தாள்.
எலிசபெத்!
மரியாளே, எனதருமை மரியாளே,
பெண்களுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள்!
உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது!
உனது வாழ்த்துதலை கேட்டவுடனே,
என் வயிற்றிலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
என் மீட்பராகிய தேவனில் என் ஆவி களிகூருகிறது.
இது முதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
நாசரேத்து ஊரில் உள்ள அனைவரும் அறிய வேண்டியது என்னவென்றால்,
கலிலேயா, யூதேயா தேசத்தில் மக்கள் தொகை கணக்கு எடுக்கப்படும்படி
அகஸ்துராயன் கட்டளையிட்டிருக்கிறார்.
எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பில்
எல்லோரும் அவரவர் ஊர்களுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
மரியாள் யூதேயாவிலுள்ள பெத்லகேம் ஊருக்குத் தான்
திருமண ஒப்பந்தம் செய்திருந்த யோசேப்புடன் பெயர் பதிவு செய்யும்படி சென்றாள்,
பெத்லகேமிலே அவர்களுக்குத் தங்க இடமில்லாதிருந்தது,
ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ ஓர் எளிய மாட்டுத் தொழுவம்.
அப்பொழுது அந்த தேசத்தின் சில மேய்ப்பர்கள் இரவிலே வயல் வெளியில் ஆடுகளை காத்துக் கொண்டிருந்தார்கள்,
தேவதூதன் அவர்கள் முன் தோன்றினான். தெய்வீக மகிமை அவர்களைச்சுற்றிலும் பிரகாசித்தது.
பயப்படாதிருங்கள், இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
மேய்ப்பர்கள் அவ்விடம் விட்டு விரைந்து தொழுவத்தில் பிறந்த பாலகனை காணச் சென்றனர்,
கன்னித்தாய்க்கு பிறந்த மீட்பரின் பிறப்பின் நற்செய்தியை முதலில் பர்ப்பினவர்கள் இவர்களே;