வீடியோ ஏற்றப்படுகிறது
உரைநகல்
Tamil (தமிழ்)
இயேசு எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அதைக் கண்டு அதற்காக கண்ணீர் விட்டார்.
உனக்கு கிடைத்த இந்த நாளிலாவது
உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்.
இப்பொழுது அவைகள் உன் கண்களுக்கு மறைவாய் இருக்கிறது.
உன் சத்துருக்கள் உன்னை சுற்றி மதில் எழுப்பி, உன்னை வளைந்து கொண்டு எப்பக்கத்திலும்
உன்னை நெருக்கி அழித்து விடுவார்கள்.
உன்னையும் உன்னில் உள்ள உன் பிள்ளைகளையும்
தரையாக்கி போடுவார்கள்.
உன்னிடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு செய்யும் நாட்கள் உனக்கு வரும்.
ஏனென்றால் உனக்கு கிடைத்த தருணத்தை நீ இழந்து விட்டாய்.