வீடியோ ஏற்றப்படுகிறது
உரைநகல்
Tamil (தமிழ்)
பாவிகளை ரட்சிப்பதற்கும் அவர்களை தேவனிடத்தில் திருப்புவதற்கும் தேவன் மேசியாவை அனுப்புவார்
என்று தீர்க்கதரிசிகள் நீண்ட காலத்திற்கு முன்பே வேதத்தில் எழுதினார்கள்.
இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி,
ஒரு குமாரனை பெறுவாள் உரை என்று தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடி இது நடந்தது.
மரியாள் கன்னிகையாக இருந்தபோது தேவனுடைய வல்லமையால் கர்ப்பபதியாகி இயேசுவை பெற்றெடுத்தாள்.
வேதத்தில் எழுதி இருக்கிற படி அந்த குழந்தை தான் மேசியா என்பதற்கு தேவனுடைய அடையாளமாக
இயேசுவின் அதிசயமான பிறப்பு இருந்தது. தேவன் இயேசுவை அவருடைய சொந்த குமாரன் என்று அழைக்கிறார்.
மக்கள் இயேசுவை கண்டபோது தேவனின் தன்மையையும் மற்றும் வல்லமையையும் கண்டார்கள்.
அவர் ஜனங்களை சுகமாக்கி அவர்களின் பாவங்களை மன்னித்தார்.
அவர்களுக்கு நித்திய வாழ்வை தருவதாக வாக்களித்தார்.
எல்லா மனுக்குலத்தின் பாவத்திற்கு பதிலாக
இயேசு தம் வாழ்க்கையை பலியாக அர்ப்பணித்து பாவத்தின் தண்டனையை ஏற்றுக் கொண்டார்.
அவர் மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம் அவருடைய வல்லமை
மரணத்தின் வல்லமையை விட சிறந்தது என்று காட்டினார்.
மேசியாவாகிய இயேசு என்னுடைய ஜீவனை கொடுக்கவும்
அதை மறுபடியும் எடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு என்றார்.
இயேசுவினுடைய வாழ்க்கையானது தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டபடியே நிறைவேறினபடியால்
பரிசுத்த வார்த்தையானது குறையற்றது மற்றும் நித்தியமானது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இயேசு தான் தேவனின் வார்த்தை, இயேசுவில் தேவன் தன்னை உலக ஜனத்திற்கு வெளிப்படுத்தினார்.
தேவன் முதல் மனுஷனையும் மனுஷியையும் பரிபூரணமாக படைத்தார். ஆனால் அவர்கள் தேவனை நம்பவும் இல்லை,
அவருக்கு கீழ்படியவும் இல்லை. ஆகவே இயேசு பரிபூரண வாழ்வை கொடுக்க வந்தார்.
எல்லோரும் பாவம் செய்து உள்ளார்கள், பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
பாவம் செய்கிற ஜனங்கள் தேவனோடு உறவு கொண்டு வாழ முடியாது.
ஆனால் தேவன் ஆபிரகாமின் மகனுக்கு பதிலாக ஆட்டுக்குட்டியை பலியாக கொடுத்ததை போல
தேவன் இயேசு கிறிஸ்துவை ஆதாமின் சந்ததியருக்கு பதிலாக கொடுத்தார்.
யார் எல்லாம் இயேசுவின் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைக்கிறார்களோ,
அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தில் வரும்படி இதைச் செய்தார்.
அதனால் யாரெல்லாம் இயேசுவை விசுவாசித்து பின்பற்றுகிறார்களோ,
அவர்கள் தண்டனையிலிருந்து தப்பி, தேவனோடு நித்தியமாய் வாழ்வார்கள்.
இயேசு மரித்து உயிர்த்தெழுந்த போது அவரை பின்பற்றுகிறவர்களிடம் சொல்லியது:
ஜனங்கள் எல்லா தேசத்திலும் என்னுடைய நாமத்தை அறிவிப்பார்கள்,
யாரெல்லாம் மனந்திருந்தி தேவனிடம் வருகிறார்களோ அவர்களை மன்னிக்கிறார்.
அவரை பின்பற்றுகிறவர்களோடு இருக்கும்படிக்கும், சத்தியத்தை காண்பிக்கும்படிக்கும்,
தேவனின் வழிகளை பின்பற்ற வல்லமையையும் கொடுக்க பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக இயேசு சொன்னார்.
எப்போது பாவியான பெண் மனம்திருந்தி இயேசுவைப்பின் தொடர்ந்தாளோ
அப்போது இயேசு அவரிடம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றும்,
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றும் சொன்னார்.
யார் வேண்டுமானாலும் தேவனுடைய கிருபையால் இயேசுவின் மீது உள்ள விசுவாசத்தை கொண்டு
இரட்சிப்படைய முடியும். இயேசு மட்டுமே பாவங்களை மன்னிக்க அதிகாரம் உடையவர்.
யாரெல்லாம் இயேசுவை பின்பற்றி வர தீர்மானித்திருக்கிறார்களோ,
அவர்கள் பின்வரும் விசுவாச வார்த்தைகளை பயன்படுத்தி அவரோடு உறவு கொள்ள முடியும்.
பிதாவாகிய தேவனே நீர் நீதிபரர், நீர் என்னை நேசிப்பதற்காக நன்றி!
நான் உம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படியாமல் பாவம் செய்ததற்காக வருந்துகிறேன்
நீர் எனக்கு பதிலாக இயேசுவை அனுப்பி, சிலுவையில் மரிக்கச் செய்ததற்காகவும்
அவர் உயிரோடு எழுந்ததற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
நான் செய்த பாவத்திற்காக இயேசு தண்டனை பெற்றதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
நான் உம்முடைய வழியை பின்பற்ற விரும்புகிறேன்.
இயேசுவை என் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்கிறேன்.
என்னுடைய பாவங்களை மன்னித்ததற்காகவும், உம்மோடு கூட நித்திய ராஜ்யத்தில் சேரும்படிக்கு
எனக்கு நீர் வழியை திறந்ததற்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
பரிசுத்த ஆவியானவர் என்னோடு இருக்கவும் உம்முடைய வழியை காண்பிக்கவும் உம்மை வேண்டுகிறேன்.
உம்மை நேசிப்பதற்கு எனக்கு வல்லமையையும், உமக்கு பிரியமான வாழ்க்கை வாழ எனக்கு பலமும் தருவீராக!
சகல தேசத்திலும் உள்ள ஜனங்கள் உம்மை துதிப்பார்களாக. ஆமென்.
தன்னை பின்பற்றுகிறவர்களை குறித்து இயேசு சொன்னது: என் ஆடுகள் என் சத்தத்தை கேட்கும்.
நான் அவைகளை அறிவேன், அவைகள் எனக்கு பின் வருகிறது. இயேசுவை பின்பற்றுகிறவர்கள் ஒன்றாக கூடுவார்கள்.
தினந்தோறும் அவருடன் பேசுவார்கள், வேதத்தில் அவருடைய வார்த்தைகளை வாசித்து,
அவருடைய மாதிரிகளை பின்பற்றுவார்கள். அவரை குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
அவர்கள் இருதயத்தில் வாசம்பண்ணுகிற தேவ ஆவியானவரின் வல்லமையினால்
அவர்களை இயேசு பலப்படுத்தி வழி நடத்துவார். வானத்திலும் பூமியிலும்
சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன்.